இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
Published on

லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

எனினும், இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிக பற்றில்லாமல் இருந்த ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர்.

தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஆர்ச்சி எனும் 2 வயது மகன் இருக்கிறான். இந்த நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். இதுபற்றிய புகைப்படமும் வெளியானது.

இதற்கு, ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் சார்லஸ் என ஒட்டுமொத்த அரச குடும்பமும் மகிழ்ச்சியில் இருந்து வந்தது. இந்நிலையில், மேகனுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இதுபற்றிய அறிவிப்பினை ஹாரி-மேகன் தம்பதி வெளியிட்டு உள்ளது.

அதில், கலிபோர்னியாவில் சான்டா பார்பரா நகரில் சான்டா பார்பரா காட்டேஜ் மருத்துவமனையில் நல்ல உடல் ஆரோக்கியமுடன் கடந்த வெள்ளி கிழமை, ஜூன் 4ந்தேதி மேகனுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹாரி-மேகன் தம்பதி தங்களுடைய மகளுக்கு ராணி எலிசபெத் மற்றும் ஹாரியின் தாய் டயானா ஆகியோரது பெயரை கொண்டு லில்லி டயானா என பெயரிட்டு உள்ளனர். ராணி எலிசபெத்தின் குடும்ப பெயர் லில்லிபெட் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com