இளைஞர்களே ‘ஸ்மார்ட் போன்’களை அதிக நேரம் பயன்படுத்தினால் ஆபத்து

தற்போது இளைஞர்கள் மத்தியில் ‘ஸ்மார்ட் போன்’களின் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் உடல் பருமன் மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்களே ‘ஸ்மார்ட் போன்’களை அதிக நேரம் பயன்படுத்தினால் ஆபத்து
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் சார்பாக நடத்திய ஆய்வில் ஸ்மார்ட் போனை தினமும் 5 மணி நேரம் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தான நோய்கள் வரும் வாய்ப்பு 43 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட் போன்கள் உபயோகிக்கும் இளைஞர்கள் குளிர்பானம், பாஸ்ட் புட், இனிப்பு மற்றும் நொறுக்குத் தீனிகளை மற்றவர்களை விட இரு மடங்கு அதிகம் சாப்பிடுகின்றனர்.

இதனால் உடல் உழைப்பின்றி மந்தமான நிலை, இளம் வயதில் இறப்பு, நீரழிவு, இதயம் சம்பந்தமான பிரச்சினை, புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய்கள் வரலாம் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, 1040 மாணவர்கள், 360 ஆண்கள், 700 பெண்களிடம் (12 முதல் 20 வயதிற்கு உட்பட்டவர்கள்) இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com