

பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில், உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இந்த கோபுரம் முழுவதும் இரும்பினால் ஆனது. முதல் உலகப்போரின் போது, பிரெஞ்ச் ராணுவம் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் மூலம் தகவல்களை பறிமாறிக் கொள்ள ஈபிள் கோபுரத்தை பயன்படுத்தியுள்ளது.
இந்த கோபுரம் குஸ்டாவ் ஈபிள் என்ற என்ஜினியரால் வடிவமைக்கப்பட்டு, கடந்த 1889-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது அதன் உயரம் 1,024 அடியாக இருந்தது. தற்போது இந்த கோபுரத்தை 6 செ.மீ. உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கோபுரம் மீது தொலைதொடர்புத்துறை ஆன்டனா 20 அடி உயரத்தில் வைக்கப்படுகிறது. இதனால் கோபுரம் உயரம் 1,063 அடியாக உயருகிறது.