அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு காபூலில் இருந்து முதல் விமானம், தோஹா சென்றடைந்தது

அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு காபூலில் இருந்து முதல் விமானம், தோஹா சென்றடைந்தது.
அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு காபூலில் இருந்து முதல் விமானம், தோஹா சென்றடைந்தது
Published on

தோஹா,

20 ஆண்டுகளாக நடந்து வந்த போருக்கு பின்னர் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் வசப்படுத்தினர். கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூல் வீழ்ந்த பின்னர் அங்கிருந்து பல்வேறு நாட்டினரும் பாதுகாப்பாக வெளியேறி சொந்த நாடுகளுக்கு சென்றனர். அமெரிக்க படை வீரர்களின் கடைசி விமானம் கடந்த 31-ந் தேதி காபூலில் இருந்து புறப்பட்டு சென்றது. தற்போது ஆப்கானிஸ்தான் முற்றிலுமாக தலீபான்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் முதல் வணிக விமானம் காபூலில் இருந்து நேற்றுமுன்தினம் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவுக்கு புறப்பட்டு சென்றது.

113 பயணிகளுடன் சென்ற அந்த விமானம், அங்கு பத்திரமாக தரை இறங்கியது. அதில் பயணம் செய்தவர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் அங்கிருந்து தாங்கள் போய்ச்சேர வேண்டிய பிற இடங்களுக்கு புறப்பட்டு சென்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com