வருகிற மே மாதம் முதன்முதலாக அமெரிக்க நிறுவனம், விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது

வருகிற மே மாதம் முதன்முதலாக அமெரிக்க நிறுவனம், விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
வருகிற மே மாதம் முதன்முதலாக அமெரிக்க நிறுவனம், விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் தொழில் அதிபர் எலன் மஸ்க் 2002-ம் ஆண்டு ஸ்பேக்ஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி வணிக நிறுவனத்தை தொடங்கி, நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் முதன்முதலாக விண்வெளிக்கு, அதுவும் பூமியில் இருந்து சுமார் 250 மைல் உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு வருகிற மே மாதம் வீரர்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா அறிவித்துள்ளது.

நாசாவை சேர்ந்த பாப் பென்கென், டக் ஹர்லே ஆகியோரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பால்கன் 9 ராக்கெட்டை ஏவுகிறது.

ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

அது மட்டுமின்றி சர்வதேச விண்வெளி மையத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்கு 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 15 முறை இந்த நிறுவனம், விண்கலங்களை அனுப்பி வைத்துள்ளது.

ஆனால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை இந்த நிறுவனம் அனுப்பி வைப்பது இதுவே முதல்முறை என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com