

கீவ்,
கிழக்கு உக்ரைனில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அரசு படையினருக்கும் ரஷியாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சி படையினருக்கும் இடையே இந்த போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அரசின் செய்தி தொடர்பாளர் நேற்று கீவ் நகரில் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர், கிழக்கு பிராந்தியத்தில் உள்ள டொனெட்ஸ்க் மீதான அரசு படையின் தாக்குதல் ஒரு வேளை தோல்வி அடைந்தால், அதிபர் அலுவலகம், நாடாளுமன்றம், பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமைச்சகங்களை கீவ் நகரில் இருந்து லிவிவ் நகருக்கு மாற்றிவிடலாம் என்று உக்ரைன் அரசு அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர் என உளவுத்தகவல்கள் கூறுகின்றன என்று தெரிவித்தார்.