கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

கனடாவில் தேவாலயம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.
கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
Published on

ஒட்டாவா,

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 78 வயதான முதியவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் தேவாலயத்தில் இருந்த அனைவரும் அவரை சுற்றி வளைத்து மடக்கினர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.

இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பதை உறுதிப்படுத்திய போலீசார், தாக்குதலுக்கான பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com