239 பயணிகளுடன் மாயமான எம்எச் 370 மலேசிய விமானத்தின் விமானி பேசிய கடைசி உரையாடல்

239 பயணிகளுடன் மாயமான எம்எச் 370 மலேசிய விமானத்தின் விமானி பேசிய கடைசி உரையாடல்கள் வெளியாகி உள்ளது.
239 பயணிகளுடன் மாயமான எம்எச் 370 மலேசிய விமானத்தின் விமானி பேசிய கடைசி உரையாடல்
Published on

239 பயணிகளுடன் மாயமான எம்எச் 370 மலேசிய விமானத்தின் விமானி சம்பவத்தன்று கட்டுப்பாட்டு அறையுடன் பேசிய கடைசி உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த உரையாடல்கள் அனைத்தும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் பேசியது போன்று உள்ளதாகவும், திட்டமிட்டே விமான ஊழியர்கள் உள்ளிட்ட 239 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என நிபுணர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானியின் உரையாடல்களை ஆய்வுக்கு உட்படுத்திய நிபுணர்கள், விமானி அந்த விமான பயணிகள் அனைவரையும் கொலை செய்யும் எண்ணத்துடனே செயல்பட்டிருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர். மட்டுமின்றி கட்டுப்பாட்டு அறையுடன் அவர் உரையாடும் போது பல முறை தெளிவற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாகவும், அதை தெளிவாக கூறுங்கள் என பலமுறை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் திருப்பிக் கூறியதாகவும் அந்த உரையாடலில் பதிவாகியுள்ளது.

மேலும், தமது திட்டம் மற்றும் மனநிலை எக்காரணம் கொண்டும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தெரிவிந்துவிட கூடாது என்பதில் அந்த விமானி கவனமாக செயல்பட்டிருக்கிறார் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விமானத்தை அவர் இந்தியப்பெருங்கடலுக்குள் செலுத்தினாரா அல்லது ரஷ்ய ஏவுகணைக்கு இரையாக்கினாரா என்பது இதுவரை மர்மம் விலகாத நிலையில், விமானியின் கடைசி கலந்துரையாடல் அதிக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மட்டுமின்றி மலேசியாவில் புதிதாக தேர்வாகியிருக்கும் பிரதமர் மஹாதிர், மாயமான விமானம் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை மீண்டும் தொடர இருப்பதாக அறிவித்துள்ளது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com