சிறுமியின் லாலி பாப் மிட்டாயை குட்டி நாய் பறித்து சென்ற லாவகம்; வைரலான வீடியோ

சிறுமியிடம் இருந்த லாலி பாப் மிட்டாயை குட்டி நாய் ஒன்று பறித்து சென்று வீரநடை போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சிறுமியின் லாலி பாப் மிட்டாயை குட்டி நாய் பறித்து சென்ற லாவகம்; வைரலான வீடியோ
Published on

நியூயார்க்,

சமூக ஊடகங்களில் வெளிவரும் பல விசயங்கள் ரசனையை தூண்டும் வகையில் இருக்கும். அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சிறுமி தனது கையில் லாலி பாப் மிட்டாயுடன் தெருவோர பகுதியில் நடந்து செல்கிறார்.

சிறுமியை பின் தொடர்ந்து கருப்பு நிற குட்டி நாய் ஒன்று செல்கிறது. அதற்கும் மிட்டாய் சாப்பிட ஆசை. ஆனால், கேட்கவா முடியும்? இல்லை கிடைக்கவா போகிறது? சிறுமியிடம் விளையாடி கொண்டே செல்கிறது.

சிறுமியும், திரும்பி பார்த்து கொண்டு, குட்டி நாயுடன் விளையாடி கொண்டே செல்கிறாள். ஒரு கட்டத்தில் குட்டி நாய், சிறுமியின் கால்களை சுற்றி, சுற்றி வருகிறது. இதனால் அதனை துரத்தி விட திரும்பும் சிறுமி, தவறுதலாக மிட்டாயை கீழே போட்டு விடுகிறது.

தரையில் விழுந்து மிட்டாயில் மண் ஒட்டி விட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, அதில் இருந்து மீள்வதற்குள் மிட்டாயை தூக்கி கொண்டு குட்டி நாய் ஓடி விடுகிறது. பின்னர் தனது முயற்சியில் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில், வாயில் மிட்டாயை கவ்வியபடி மிடுக்காக வீரநடை போட்டு குட்டி நாய் சென்றது.

அந்த மிட்டாயை தவற விட்ட சோகத்தில் சிறுமி அழ ஆரம்பிக்கிறாள். இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளனர். இதனை லட்சக்கணக்கானோர் பார்த்து, லைக் செய்து, பகிர்ந்தும் உள்ளனர். விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com