உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.95 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது
Published on

ஜெனீவா,

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,13,97,856 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,95,85,227 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16,00,189 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 2,02,12,440 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.06 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 1,62,76,931, உயிரிழப்பு - 3.02,647, குணமடைந்தோர் - 94,72,191

இந்தியா - பாதிப்பு - 98,26,031, உயிரிழப்பு - 1,42,618, குணமடைந்தோர் - 93,21,249

பிரேசில் - பாதிப்பு - 68,36,313, உயிரிழப்பு - 1,80,453, குணமடைந்தோர் - 59,54,745

ரஷியா - பாதிப்பு - 25,97,711 உயிரிழப்பு - 45,893, குணமடைந்தோர் - 20,59,840

பிரான்ஸ் - பாதிப்பு - 23,51,372, உயிரிழப்பு - 57,567, குணமடைந்தோர் - 1,75,891

இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து, இத்தாலி, துருக்கி, ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் தங்களது அதிகபட்ச பாதிப்புகளை பதிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com