கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.80 கோடி ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53.71 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.80 கோடி ஆக உயர்வு
Published on

வாஷிங்டன்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு, 226 நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வரும் வைரசால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 80 லட்சத்து 39 ஆயிரத்து 557 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 25 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com