உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.81 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63.83 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.81 கோடியாக உயர்வு
Published on

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 83 லட்சத்து 20 ஆயிரத்து 667 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 35 லட்சத்து 82 ஆயிரத்து 226 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 61 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரத்து 647 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 7 ஆயிரத்து 794 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com