உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56.16 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56.16 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் முதன்முறையாக கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரசானது கண்டறியப்பட்டு வெளியுலகுக்கு பரவலாக தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரசானது, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது பி.ஏ. ரக பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58.98 கோடியாக ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56.16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64.37  லட்சம்பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 36,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.ஒரே நாளில் 125 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com