

பிரேசிலியா,
சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 47,15,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,12,317 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரசால் தென் அமெரிக்க நாடான பிரேசிலும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பிரேசிலில் புதிதாக 14,919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,33,142 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 816 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 15,633 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 89,672 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசில் தற்போது ஜந்தாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் ஸ்பெயினும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும், நான்காவது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளன.