

பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குனர் ஓலிவர் ஸ்டோன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சமீபத்தில் பேட்டி எடுத்தார்.
இந்த பேட்டி டாக்குமெண்டரி படம் போல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் புதின் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் ஒன்றும் பெண் கிடையாது, அதனால் எனக்கு கெட்ட நாட்கள் என்பதே கிடையாது என கூறியுள்ளார்.
இதை சொல்வதன் மூலம் நான் யாரையும் அவமதிக்க முயற்சிக்கவில்லை. இதெல்லாம் இயற்கையின் விஷயங்கள் தான் என புதின் தெரிவித்துள்ளார்.
திடீரென போர் வந்தால் அமெரிக்கா அதில் ஆதிக்கம் செலுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த புதின், அப்படியான போர் வந்தால் யாருமே அதிலிருந்து தப்பித்து வாழ முடியாது என தாம் நினைப்பதாக கூறியுள்ளார்.
டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றது குறித்த கேள்விக்கு, மாற்றம் ஒன்றே மாறாதது என கூறிய புதின், பிறப்பு முதல் இறப்பு வரை மாற்றம் என்பது இருக்கும் என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தகவல்களை திருடி ரஷ்யாவுக்கு கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கி தற்போது ரஷ்யாவில் வாழும் எட்வரடு ஸ்னோடன் குறித்து புதின் கூறுகையில், ஸ்னோடன் துரோகி கிடையாது.
அவர் தனது நாட்டின் நலன்களை காட்டி கொடுக்கவில்லை மற்றும் எந்த நாட்டிற்கும் தகவல்களை பரிமாறவில்லை என புதின் கூறியுள்ளார்.