‘கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம் அதிகம்’ - நிபுணர் கருத்து

கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கிற அபாயம் அதிகமாக உள்ளது என்று நிபுணர் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம் அதிகம்’ - நிபுணர் கருத்து
Published on

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியின் ஆதிக்கம், அமெரிக்காவை பாடாய்ப்படுத்துகிறது. அதனால்தான் உலகின் வேறெந்த நாட்டையும் விட அந்த நாடு அதிகளவு பாதிப்பை சந்தித்து வருகிறது.

நேற்று மதிய நிலவரப்படி அங்கு கொரோனா பாதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 104 என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தகவல் சொல்கிறது.

இதையொட்டி அங்கு ஒபாமா ஆட்சி காலத்தில், வெள்ளை மாளிகையின் எபோலா வைரஸ் தடுப்பு நிபுணராக இருந்த ராப் கிளெயின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், பூமியில் மிக மோசமான இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா கொண்டுள்ளது. நீங்கள் வேறு எந்த நாட்டிலும் இருப்பதை விட ஒரு அமெரிக்கராக இருந்தால் கொரோனாவால் இறக்கிற அபாயம் அதிகமாக உள்ளது என்று கூறினார்.

அமெரிக்காவில் இதுவரை 48 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தன் பிடியில் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com