தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனை தாக்கத் தொடங்கிய ரஷிய ராணுவம்...!

தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனை ரஷியா தாக்கத் தொடங்கியுள்ளதாக அந்த நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார்.
தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனை தாக்கத் தொடங்கிய ரஷிய ராணுவம்...!
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.

தொடர்ந்து உக்ரைனின் ராணுவ தளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷியா தாக்குதலை தொடுத்து வருகிறது. ரஷிய ராணுவ படைகளின் அணிவகுப்புகளை வெள்ளை மாளிகை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை தாக்கத் தொடங்கியுள்ளது ரஷிய ராணுவம். உள்ளூர் நிர்வாகம் சமூக ஊடகங்களில் நகரம் ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்டதாகவும் ஆனால் நகரம் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

தொடக்கத்தில், ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் ஆக்ரோஷ எதிர்ப்புகளை கண்டு அதிர்ச்சியடைந்தபோதும், தற்போது சூழ்நிலை அவர்களுக்கு அதிக சவாலாக உள்ளது என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com