ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடியில் நிற்காமல் சென்ற இளம் டாக்டர் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடியில் நிற்காததற்காக புதிதாக மணமுடித்த இளம் டாக்டரை தலீபான்கள் சுட்டு கொன்றனர்.
ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடியில் நிற்காமல் சென்ற இளம் டாக்டர் சுட்டு கொலை
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியிடம் இருந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி ஆட்சி அமைத்தனர். இதன்பின் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனை தொடர்ந்து அந்நாட்டு மக்களில் பலர் வேறு நாடுகளுக்கு செல்ல தொடங்கினர்.

இந்த நிலையில், அந்நாட்டின் ஹெராத் மாகாணத்தில் ஹெராத் நகரில் அமைந்த போலீஸ் சோதனை சாவடி ஒன்றில் வாகனம் ஒன்று நிற்காமல் சென்றது. இதனால், அதில் இருந்த இளம் டாக்டரான அம்ருதீன் நூரி (வயது 33) என்பவரை தலீபான்கள் சுட்டு கொன்றுள்ளனர்.

சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com