டெல்டா வைரசுக்கு எதிரானது ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி - ரஷிய நிறுவனம் உறுதி

டெல்டா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 100 சதவீத பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக ரஷிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்டா வைரசுக்கு எதிரானது ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி - ரஷிய நிறுவனம் உறுதி
Published on

மாஸ்கோ,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி என்ற சிறப்பு, ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு உண்டு. இந்த தடுப்பூசி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே உருவாக்கப்பட்டு விட்டது.

இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி மையம் உருவாக்கியது. இந்த தடுப்பூசி பற்றி கமலேயா ஆராய்ச்சி மைய ஆய்வுக்கூட தலைவர் விளாடிமிர் குஷ்சின் கூறியதாவது:-

டெல்டா வைரசை ஸ்புட்னிக் தடுப்பூசி வெளிப்படையாக சமாளிக்கிறது. இந்த தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ்களின் மிகவும் ஆபத்தான நிகழ்வுகளுக்கு எதிராக 100 சதவீத பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com