

ஜூரிச்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் நிலையில், தலிபான்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு, அவர்களை கட்டுப்படுத்த ராணுவ வீரர்களை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஹெராத் மாகாணத்தில் கடந்த 2 வாரங்களில் பொதுமக்களில் 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 31 குழந்தைகள், 24 பெண்கள் உள்பட 260 பேர் காயமடைந்து உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனால், மீண்டும் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வெளிவிவகார துறை வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானின் சமீபத்திய
பாதுகாப்பு நிலைமையை முன்னிட்டு தன்னுடைய பணியாளர்களை முன்பே 50 சதவீதம் அளவுக்கு திரும்ப பெற்று கொண்டு விட்டது.
இந்த நிலையில், மீதமுள்ள 3 ஊழியர்களையும் திரும்ப பெற்று கொள்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை மற்றொரு நாட்டுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்றி விடுவோம் என்று தெரிவித்து உள்ளது.