முடங்கிய பேஸ்புக், கேலி செய்த டுவிட்டர்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதை கேலி செய்யும் விதமாக டுவிட்டர் நிறுவன சிஇஓ டுவிட் செய்தது இணையதளவாசிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முடங்கிய பேஸ்புக், கேலி செய்த டுவிட்டர்
Published on

கலிபோர்னியா

நேற்று முன்தினம் பேஸ்புக் மற்றும் அதற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் செயலிகள் ஏறக்குறைய 7 மணிநேரம் முடங்கியதால் சமூக வலைதளவாசிகள் டுவிட்டர், டெலிகிராம் நோக்கி மொத்தமாக படையெடுத்தனர்.

பேஸ்புக் டவுண், இன்ஸ்டாகிராம் டவுண் போன்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டு செய்து பேஸ்புக்கை கேலி செய்தனர் டுவிட்டர் பயனர்கள். டுவிட்டர் நிறுவனமும் டுவிட்டர் பக்கம் புதியதாக வந்தவர்களை குறிக்கும் விதமாக அனைவருக்கும் வணக்கம் என்று டுவிட் செய்தது.

இந்த நிலையில் பேஸ்புக் இணையதளம் விற்பனைக்கு என டுவிட் செய்யப்பட்ட படத்தை டுவிட்டர் சிஇஓ ஜேக் டார்சி பகிர்ந்து அதன் விலை எவ்வளவு என பதிவிட்டு கேலி செய்தார். இந்த பதிவை பலர் ஷேர் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com