உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிராக ரஷ்யாவில் இருந்து வெளியேறிய இருபெரும் நிறுவனங்கள்..!

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 12-வது நாளை எட்டியுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிராக ரஷ்யாவில் இருந்து வெளியேறிய இருபெரும் நிறுவனங்கள்..!
Published on

மாஸ்கோ,

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிராக ரஷ்யாவில் இருந்து சர்வதேச அளவிலான மிகப்பெரிய கணக்கியல் சேவை நிறுவனமான கே.பி.எம்.ஜி (KPMG)மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (PWC) நிறுவனங்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளன.

கணக்கியல் சேவை நிறுவனமான கே.பி.எம்.ஜி நிறுவனத்திற்கு ரஷியா மற்றும் பெலாரஸில் 4 ஆயிரத்து பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இந்நிலையில், ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்து வெளியேறுவதாக கே.பி.எம்.ஜி அறிவித்துள்ளது.

இதைபோல ரஷியாவில் 30 ஆண்டுகளாக இருந்த பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனமும் தனது உறவை முறித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு 3,700 பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் ரஷியாவில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com