யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து அமெரிக்கா விளக்கம் ஏதும் அளிக்கவில்லை
யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா
Published on

வாஷிங்டன்,

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்காவின் அரசுத்துறை செய்தித்தொடர்பாளர் டாமி ப்ரூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டோடு யுனெஸ்கோ தொடர்ந்து செயல்படுவதே இந்த விலகலுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதற்கு முன் 1984-ல் யுனெஸ்கோ அமைப்பு ரஷியாவிற்கு சாதகமாக உள்ளது எனக்கூறி அமெரிக்கா வெளியேறியது. அப்போது ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் 2002-ல் மீண்டும் யுனெஸ்கோவில் இணைந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்த நிலையில், தற்போது மீண்டும் வெளியேறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com