

நியூயார்க்,
உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் மற்றும் ஆஸ்டிராஜெனிகா உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகள் உள்ளன.
இந்த உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்கு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியுள்ளது. இதேபோன்று இருவேறு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இந்த அனுமதி பயன்படும். இதனை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் பயணிகளுக்கான சுகாதார பிரிவுக்கான தலைவர் சிண்டி பிரீட்மேன் தெரிவித்து உள்ளார்.