

நியூயார்க்,
அமெரிக்காவின் ஹோட் தீவில் கடற்கரை ஓரத்தில் டெய்லர் ஸ்விப்ட்டுக்கு சொந்தமான சொகுசு வீடு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிச்சர்ட் ஜோசப் (வயது 26) என்ற வாலிபர், டெய்லர் ஸ்விப்ட் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். அப்போது டெய்லர் ஸ்விப்ட் வீட்டில் இல்லை. எனினும் வீட்டில் இருந்த வேலைக்காரர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது, ரிச்சர்ட் ஜோசப் தப்பி ஓட முயன்றார். எனினும் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர், என்னிடம் ஆயுதம் எதுவும் இல்லை. நான் திருடனும் இல்லை. டெய்லர் ஸ்விப்ட்டை பார்க்க வேண்டும் என்பதற்காக அவரது வீட்டுக்குள் நுழைந்தேன் என போலீசாரிடம் கூறினார்.
இதற்கிடையே பிடிபட்ட அந்த வாலிபர் காலணி எதுவும் அணியாமல் இருந்தது குறித்து அவரிடம் போலீசார் கேட்டனர். அதற்கு அவர் நாம் ஒருவரின் வீட்டுக்கு செல்லும் போது காலணியை வீட்டுக்கு வெளியே விட்டு செல்வது கண்ணியமான செயல். அதனால் நான் எனது ஷூ வை வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டு, உள்ளே நுழைந்தேன் என்றார்.
இதைக்கேட்டு போலீசார் சிரித்தனர். அதனை தொடர்ந்து, போலீசார் வாலிபரை கைது செய்து, அழைத்து சென்றனர்.