மேடையில் பாடிய பாடகரை கட்டிப்பிடித்த இளம்பெண் கைது

மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரை ஓடிப்போய் கட்டிப்பிடித்த இளம் பெண் கைது செய்யப்பட்டார். #SaudiArabia
மேடையில் பாடிய பாடகரை கட்டிப்பிடித்த இளம்பெண் கைது
Published on

ரியாத்,

சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் டைஃப் நகரத்தில் பிரபல உருது பாடகர் மஜித் அல் மொஹண்டிஸின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஈரான் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி குடியுரிமையும் பெற்றவர். இந்நிலையில் மொஹண்டிஸ் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், திடீரென ஓடிச்சென்று பாடகரை கட்டிப்பிடித்தார்.

இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்தப் பெண்ணை அவரிடம் இருந்து இழுத்து வெளியே போக வைத்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.

பொது நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க கூடாது என்று நீண்டகாலமாக இருந்து வந்த கட்டுப்பாடு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்த சீர்திருத்த நடவடிக்கையின்போது அகற்றப்பட்டது. இதில் கடந்த மாதம் பெண்கள் கார் இயக்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவுதி அரேபியாவில் பெண்கள் தங்களுக்கு தொடர்பில்லாத ஆண்களுடன் பொது வெளியில் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் அந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com