மத்திய அரசை ஒரு குறிப்பிட்ட வழியில் சித்தரிக்க ஒரு அரசியல் முயற்சி நடக்கிறது -மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

தற்போதைய அரசை ஒரு குறிப்பிட்ட வழியில் சித்தரிக்க ஒரு அரசியல் முயற்சி நடக்கிறது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெ எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
Image courtesy : Reuters
Image courtesy : Reuters
Published on

நியூயார்க்

5 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டேனி பிளிங்க்கன், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு ஆலேசகர் ஜேக் சுல்லிவன் ஆகியேரை சந்தித்து பேச உள்ளார்.

கெரேனா தடுப்பூசி உற்பத்தி, குவாட் அமைப்பை வலுப்படுத்துதல், பெருளாதார, பாதுகாப்பு விவகாரங்கள் என பல அம்சங்கள் தெடர்பாக ஜெய்சங்கர் பேச்சு நடத்துவார் எனத் தெரிகிறது.

இது தவிர அமெரிக்க தெழிலதிபர்களையும் இப்பயணத்தின்பேது ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள ஜே பைடன் பெறுப்பேற்ற பிறகு இந்திய அமைச்சர் ஒருவர் மேற்கெள்ளும் முதல் பயணம் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

ஹூவர் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் எச்.ஆர். மெக்மாஸ்டருடன்

கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசும் போது கூறியதாவது:-

இந்தியாவில் தற்போதைய அரசாங்கத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் சித்தரிக்க ஒரு அரசியல் முயற்சி நடக்கிறது. அரசியல் உருவங்களுக்கும் உண்மையில் ஆளுகை பதிவிற்கும் வித்தியாசம் உள்ளது . தொற்றுநோயால் இந்தியா இப்போது மிகவும் அழுத்தமான நேரத்தை கடந்து செல்கிறது.

கடந்த ஆண்டு பல மாதங்களாக, நாங்கள் உண்மையில் இலவச உணவை வழங்குகிறோம், இப்போது மீண்டும் தொடங்கியுள்ள இரண்டாவது அலை காரணமாக 80 கோடி மக்களுக்கு இலவச உணவு வழங்குகிறோம் . நாங்கள் 40 கோடி மக்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்துகிறோம் என கூறினார்.

இந்திய ஜனநாயகத்தின் மதச்சார்பற்ற தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய சில "இந்துத்துவ கொள்கைகள்" குறித்து மெக்மாஸ்டர் கேட்ட கேள்விக்கு ஜெய்சங்கர் "இந்தியர்களான நாங்கள் எங்கள் ஜனநாயகம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் ... இந்தியா ஒரு ஆழமான பன்மைத்துவ சமூகம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com