

வாஷிங்டன்,
அமெரிக்க அரசின் வர்த்தக பிரதிநிதிகள் சமீபத்தில் டெல்லி வந்து இந்திய அதிகாரிகளுடன் பரஸ்பர வர்த்தகம் குறித்தும், வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்தியாவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் அந்த நாட்டின் பொருட்களுக்கும் அமெரிக்கா அதிக வரி விதிக்கும் என்று தான் எச்சரித்ததை தொடர்ந்து, அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு வைத்துக்கொள்ள இந்திய அதிகாரிகள் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவும் அப்போது அவர் கூறினார். மேலும் தன்னை (டிரம்ப்) மகிழ்ச்சிப்படுத்தவே அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு வைத்துக்கொள்ள விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் கூறியதாகவும் அப்போது டிரம்ப் தெரிவித்தார்.