தீராத தலைவலி.. ஸ்கேன் செய்து பார்த்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவலி இருந்தது.
தீராத தலைவலி.. ஸ்கேன் செய்து பார்த்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!
Published on

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவலி இருந்தது. இது எதனால் ஏற்படுகிறது என்பதே தெரியாமல் ஒவ்வொரு நாளும் வலியோடு வாழ்ந்து வந்தார் அவர். நன்றாக தூங்கி எழுந்தாலும் கூட அவருக்கு தலைவலி என்பது இருந்து கொண்டே இருந்தது.

இறுதியாக மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரது மண்டை ஓட்டில் புல்லட் ஒன்று சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில், ஆச்சரியம் என்ன என்றால், தனது தலையில் புல்லட் எப்படி வந்தது என்பது குறித்து அவருக்கும் காரணம் தெரியவில்லை.

தற்போது இந்த நபருக்கு 28 வயது ஆகிறது. தனக்கு 8 வயது இருந்தபோது, தன்னுடைய சகோதரரும், தானும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் பயன்படுத்திய ஏர்கன் மூலமாக இந்த புல்லட் பாய்ந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கிறார் அவர்.

சின்ன வயதில் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டது குறித்து ஞாபகம் இருக்கிறது என்றும், ஆனால், தலை முடியை வைத்து மறைத்து தனது பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மருத்துவர்கள் இதுகுறித்து கூறுகையில், சுமார் 0.5 செ.மீ முதல் 1 செ.மீ. அளவு கொண்டதாக இந்த புல்லட் இருந்தது. இவர் இவ்வளவு நாட்களாக இந்த புல்லட்டுடன் எப்படி உயிர் வாழ்ந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனினும், புல்லட் மண்டை ஓட்டை தாண்டி உள்ளே இறங்காமல், வெளிப்புறத்திலேயே இருந்ததால், இவருக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லாமல் இருந்திருக்க கூடும் என்று தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் யாராயினும் லேசான தலைவலி என்றால், அதுவும் எப்போதாவது வந்தால் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு கடந்து செல்வதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், நாள்பட்ட தலைவலி இருந்தால் அதை புறக்கணிக்க கூடாது. கட்டாயம், உரிய மருத்துவ பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com