அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து குடியரசுக் கட்சியின் மைக் பென்ஸ் விலகல்

இது என்னுடைய நேரம் அல்ல என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நியூயார்க்,

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். இதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை இரு கட்சி ஆட்சி முறையை கொண்ட நாடு ஆகும். அங்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகள் மட்டுமே போட்டியிடும். தற்போது அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியாக ஜோ பைடன் உள்ளார்.

அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அந்த வகையில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் பலரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலரும் போட்டியில் இறங்கி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் தானும் போட்டியிட இருப்பதாக கூறியிருந்தநிலையில் மைக் பென்சும் போட்டியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்துள்ளார்

லாஸ் வேகாசில் நடந்த குடியரசுக் கட்சியின் யூதக் கூட்டணி கூட்டத்தில் பேசிய அவர், "மிகவும் பிரார்த்தனை மற்றும் ஆலோசனைக்குப் பிறகு, ஜனாதிபதிக்கான எனது பிரச்சாரத்தை இன்று நிறுத்த முடிவு செய்துள்ளேன். எனக்கு இது தெளிவாகிவிட்டது: இது எனது நேரம் அல்ல," என்று பென்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com