அரச குடும்பத்திற்கு எதிரான நடிகை மேகன் மார்கல் பேட்டி , மகளின் குற்றச்சாட்டுகளுக்கு தந்தை மறுப்பு

மேகன் மார்கலின் தந்தை தாமஸ் மார்கல் தனது மகளின் குற்றச்சட்டுகளுக்கு எதிராகவும், ராயல் குடும்பத்துக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
Image courtesy : dailymail.co.uk
Image courtesy : dailymail.co.uk
Published on

லண்டன்

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.எனினும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிக பற்றில்லாமல் இருந்து வந்த ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர்.தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆர்ச்சி என்ற 2 வயது மகன் இருக்கும் நிலையில், மேகன் 2-வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.

இதனிடையே ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து விலகியதற்கு இதுதான் காரணம் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் ஆளுக்கொரு காரணத்தை கூறி பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. ஆனால் இவற்றுக்கெல்லாம் எந்தவித பதிலையும், விளக்கத்தையும் தெரிவிக்காமல் ஹாரியும் மேகனும் மவுனம் காத்து வந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே நடத்திய நேர்காணலில் ஹாரி, மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள், தங்களுக்கு பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்டவை குறித்து மனம் திறந்து பேசினர்.

அதில் இருவரும் அரச குடும்பத்தின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சசையை கிளப்பியுள்ளது.

மேகன் மார்கலின் தந்தை தாமஸ் மார்கல் தனது மகளின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும், ராயல் குடும்பத்துக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேகனின் தந்தை தாமஸ் மார்கல், இங்கிலாந்து அரச குடும்பம் இனவெறி கொண்டது என்று தான் கருதவில்லை. ஹாரி-மேகனின் மகன் நிறம் குறித்து அரச குடும்ப உறுப்பினர்கள் விமர்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்காது. ராயல்ஸ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு,

லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா தான் இனவெறி கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். குழந்தை எந்த நிறமாக இருக்கும் அல்லது குழந்தை எவ்வளவு கருப்பாக இருக்கும் என்பது பற்றிய விஷயம் பற்றி நான் என்ன யூகிக்கிறேன் என்றால், யாரோ ஒரு முட்டாள் இப்படி கேள்வி கேட்டிருக்கலாம், அதற்காக மொத்த ராயல் குடும்பத்தினரும் இனவாதியாக இருக்க வாய்ப்பில்லை. மேகனின் இந்த கருத்தை விசாரிக்க வேண்டும். தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தனது மகள் தன்னை கைவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com