ஆப்கானிஸ்தான்: காபூலில் உள்ள ஓட்டல் அருகே துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீனர்கள் அதிகம் தங்கியுள்ள ஓட்டலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தான்: காபூலில் உள்ள ஓட்டல் அருகே துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டல் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஷாஹர்-இ-நாவ் பகுதியில் சீனர்கள் அதிகம் தங்கும் ஓட்டலை குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்ற போது அப்பகுதியில் உள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, அங்கு வந்த பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய 3 பேரை சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலின் போது ஓட்டல் பால்கனியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் காயமடைந்ததாக தாலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

காபூலில் உள்ள சீன விருந்தினர் மாளிகைக்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், காபூலில் உள்ள சீன தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com