தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதல்: 3 பேர் பலி, 22 பேர் காயம்

தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர். #Thailand | #bombblast
தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதல்: 3 பேர் பலி, 22 பேர் காயம்
Published on

யலா,

தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள யலா மகாணம் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்ததாக உள்ளது. தாய்லாந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக இப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல், இப்பகுதியில் ஏற்படும் வன்முறைகளால் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். இந்த நிலையில், அங்குள்ள மார்க்கெட் பகுதியை குறிவைத்து மோட்டார் சைக்கிள் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர். யலா மாகாணத்தில், கடந்த 2 ஆண்டுகளில் நிகழ்த்தப்படும் மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும். #Thailand | #bombblast

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com