ஜெர்மனி: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - 3 பேர் பலி

நெதர்லாந்தில் இருந்து ஜெர்மனிக்கு சிறிய ரக விமானம் இன்று புறப்பட்டது.
ஜெர்மனி: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - 3 பேர் பலி
Published on

பெர்லின்,

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

நெதர்லாந்தில் இருந்து ஜெர்மனிக்கு சிறிய ரக விமானம் இன்று புறப்பட்டது. விமானத்தில் 3 பேர் பயணித்தனர். விமான ஜெர்மனி வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தது.

விமான விபத்து

ஜெர்மனியின் மொச்சன்கல்பட்ச் மாகாணம் எர்கிலன்ஸ் ஜெர்டர்த் கிராமம் அருகே பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com