அர்ஜென்டினா: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

அர்ஜென்டினாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினாவின் தெற்கு பகுதியில் உள்ள நியூகன் மாகாணத்தின் பிளாசா ஹுயின்குல் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த ஆலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

அப்போது ஆலையில் உள்ள முக்கிய கச்சா எண்ணெய் தொட்டிகளில் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அதை தொடர்ந்து மளமளவென பற்றி எரிந்த தீ அடுத்தடுத்து தொட்டிகளுக்கும் பரவியது. இப்படி மொத்தம் 6 எண்ணெய் தொட்டிகளில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த கோர விபத்தில் ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 3 பேர் உடல் கருகி பலியாகினர். தீக்காயம் அடைந்த பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com