அதிர்ச்சி சம்பவம்.. குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

குற்றவாளியை பிடிக்க சென்ற இடத்தில் 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதிர்ச்சி சம்பவம்.. குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் யார்க் நகரில் ஒரு குற்றவாளி பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவனை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். போலீஸ் வருவதை அறிந்ததும் குற்றவாளி அங்குள்ள வயலுக்குள் ஓடி மறைந்தான். இதனையடுத்து அவன் தப்பிச் செல்லாமல் இருக்க 30 போலீஸ் வாகனங்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்தன.

இனிமேல் தப்பிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்த குற்றவாளி போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தான். இதில் குண்டுபாய்ந்து 3 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 அதிகாரிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை சக போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தப்பி ஓட முயன்ற குற்றவாளியை நோக்கி போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த குற்றவாளி கொல்லப்பட்டான். அவன் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே போலீசார் அவனை கைது செய்ய முயன்றபோதுதான் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு மாகாண கவர்னர் ஜோஷ் ஷாபிரோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com