சர்க்கஸ் கூண்டில் இருந்து தப்பி, பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த புலி

சீனாவில் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சியின் போது கூண்டில் இருந்து தப்பி, பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புலி ஒன்று புகுந்தததில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
சர்க்கஸ் கூண்டில் இருந்து தப்பி, பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த புலி
Published on

பெய்ஜிங்,

சீனாவின் ஷான்க்ஷி மாகாணத்தில் உள்ள லின்பென் என்ற இடத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக்காண ஏராளமான பார்வையாளர்கள் அங்கு கூடி இருந்தனர். பெரிய அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிக்காக புலி உள்ளிட்ட விலங்குகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன், கூண்டு ஒன்றில் அடைக்கப்பட்டு இருந்த புலி திடீரென கூண்டை விட்டு வெளியேறி பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

இதனால், பார்வையாளர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. பார்வையாளர்கள் அலறியடித்தபடி புலிக்கு வழிவிட்டு ஒதுங்கினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு குழந்தைகள் காயமுற்றனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

புலி பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த காட்சிகள் சீனாவின் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த புலியிடம் பணத்தாளை இளைஞர் ஒருவர் வீசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென இளைஞரின் கைவிரலை புலி கவ்விய சம்பவம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com