அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது

சட்ட விதிகளின்படி அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது
Published on

வாஷிங்டன்,

'டிக் டாக்' எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த ' பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்டு, இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என்று கூறி இருந்தது.

இந்நிலையில் சட்ட விதிகளின்படி அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் இந்த தடை நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com