

வாஷிங்டன்,
உலகின் முன்னணி மின்னணு சாதனங்கள், மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஆப்பிள். ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன்கள், டிவி, ஸ்மார்ட் வாட்ஸ் போன்ற சாதனங்களுக்கு உலக அளவில் பெரும் பயனாளர்கள் உள்ளனர்.
இதனிடையே, ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வாக (தலைமை செயல் அதிகாரி) டிம் குக் செயல்பட்டு வருகிறார். அவர் 2011ம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆப்பிள் சிஇஓ பதவியில் இருந்து டிம் குக் விலக உள்ளார். அவர் ஆகஸ்ட் மாதத்திற்குள் சிஇஓ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதையடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக ஜான் டென்னஸ் பதவியேக உள்ளார்.