

உலக சிக்கன தினம் முதன்முதலில் இத்தாலியின் மிலன் நகரில் 1924-ம் ஆண்டு முதல் சர்வதேச சேமிப்பு வங்கி காங்கிரசின் போது அனுசரிக்கப்பட்டது. இத்தாலிய பேராசிரியர் பிலிப்போ ரவிசா அக்டோபர் 31 ஆம் தேதியை சர்வதேச சிக்கன தினம் என்று அறிவித்தார்.
உலக சிக்கன தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 30 ஆம் தேதியும், உலகம் முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. உலக சேமிப்பு தினம் என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது.
முதலாம் உலகப் போருக்குப் பிறகு குறைந்திருந்த வங்கிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதுடன், மக்களை சேமிப்பதற்கு ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்திராகாந்தியின் நினைவு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 31ல் அனுசரிக்கப்படுகிறது. இந்த காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 உலக சிக்கன தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சிக்கன தினத்தின் கருப்பொருள் 'சேமிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது' ஆகும்.