

லண்டன்,
பிரிட்டனின் புதிய அரசை தேந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.பிரிட்டனை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இந்தத் தேதலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையின் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினாகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்தத் தேதலில்தான் முதல்முறையாக அமலுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேதல் இதுவாகும்.
கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிரதமா விரும்பினால் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னரே தேதலை நடத்த மன்னரைக் கேட்டுக்கொள்ள முடியும். ஆனால் அந்த ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற நிலைப் பருவ கால சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தேதல் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அந்தச் சட்டத்தை ரத்து செய்யும் நாடாளுமன்ற கலைப்புரிமை சட்டம் 2022-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நடைபெறும் முதல் தேதலும் இதுவாகும்.இந்தத் தேதலில் எதிக்கட்சித் தலைவா கியெ ஸ்டாமா தலைமையிலான தொழிலாளா கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இந்திய வம்சாவளியைச் சேந்த பிரதமா ரிஷி சுனக் தலைமையிலான கன்சாவேட்டிவ் கட்சி இந்தத் தேதலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று எதிபாக்கப்படுகிறது