இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

உலக வரலாற்றில் இன்றிரவு மிக முக்கிய தருணங்களில் ஒன்றாக இருக்கும் என டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது:  ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
Published on

நியூயார்க்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

மேற்காசிய போரால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. வளைகுடா நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. அமைதிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார்.

ஆனால், ஈரானோ அதனை மறுத்து வருகிறது. ஈரானின் அணு உலைகளை தாக்குவோம் என்றும் ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்றும் கூறி ஈரானுக்கு அமெரிக்கா காலக்கெடு விதித்தது. அதனை நீட்டித்தும் வந்தது. ஆனால், அந்த காலக்கெடு இன்றிரவு 8 மணி வரை இருக்கும் என டிரம்ப் கூறினார்.

அதன்பின்னர் ஈரான் உடன்படவில்லை எனில் கடுமையான தாக்குதல் இருக்கும் என கூறினார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட செய்தியில், இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது என ஈரானுக்கு கடும் எச்சரிக்கை செய்துள்ளார். அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

உலக வரலாற்றில் இன்றிரவு மிக முக்கிய தருணங்களில் ஒன்றாக இருக்கும். 47 ஆண்டு கால மிரட்டல், ஊழல் மற்றும் மரணம் இறுதியாக முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com