பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இது தொடர்பான வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய கோரி பிடிவாரண்ட் பிறப்பித்து லாகூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஜாமீனை நீட்டிக்க கோரி இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த லாகூர் ஐகோர்ட்டு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை ஜாமீன் உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com