பிரேசில்: லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பஸ் - 5 பேர் பலி

பிரேசிலில் சுற்றுலா பஸ் மீது லாரி மோதி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பிரேசில்: லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பஸ் - 5 பேர் பலி
Published on

பிரேசிலா,

பிரேசில் நாட்டின் சவோ பாலொ மாகாணத்தில் இருந்து தலைநகர் பிரசிலா நோக்கி இன்று அதிகாலை சுற்றுலா பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 55 பேர் பயணம் செய்தனர்.

கோயஸ் மாகாணம் அபர் டி கோயனியா நகர் அருகே அதிகாலை 2.20 மணியளவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் எதிரே வந்த லாரி மீது மோதி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com