பிரேக் பிடிக்காததால் முன்னால் சென்ற வாகனங்களை இடித்து தள்ளிய லாரி.. 13 பேர் உயிரிழந்த சோகம்

லாரியால் ஏற்பட்ட தொடர் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததை காவல்துறை கமாண்டர் உறுதி செய்துள்ளார்.
accident in Tanzania kills 13
Published on

எம்பெயா:

தான்சானியா நாட்டின் எம்பெயா பிராந்தியத்தின் எம்பெம்பேலா பகுதியில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரியின் பிரேக் திடீரென பழுதானதால் பெரும் விபத்து ஏற்பட்டது. சிமிக் சரிவுப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற லாரி, முன்னால் சென்ற மூன்று கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் பல மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளியது.

நேற்று நிகழ்ந்த இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள எம்பெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரேக் பிடிக்காத லாரியால் ஏற்பட்ட தொடர் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததை காவல்துறை கமாண்டர் உறுதி செய்துள்ளார். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com