போக்குவரத்தை சரிசெய்யும் ரோபோ - சீனாவில் புதிய முயற்சி

சூழலுக்கு ஏற்ப போக்குவரத்து சீரமைப்பு பணிகளை ரோபோ மேற்கொள்கிறது.
போக்குவரத்தை சரிசெய்யும் ரோபோ - சீனாவில் புதிய முயற்சி
Published on

பீஜிங்,

சீனாவின் ஹாங்சோ நகரில், மே தின விடுமுறை தினத்தை முன்னிட்டு, போக்குவரத்தை சரிசெய்வதற்காக ரோபோ ஒன்று பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. மேற்கு ஏரி(West Lake Avenue) பகுதியில் உள்ள யான்’அன் சாலை (Yan'an Road)மற்றும் புகழ்பெற்ற 'வெஸ்ட் லேக்' சுற்றுலா தலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ரோபோ ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.

போலீசாருடன் இணைந்து போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிப்பது, பாதசாரிகளுக்கு வழிகாட்டுவது மற்றும் நெரிசலான நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்வது என சூழலுக்கு ஏற்ப இந்த ரோபோ பணிகளை மேற்கொள்கிறது. சீனாவின் இந்த புதிய முயற்சி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com