ஈரானில் ரெயில் தடம் புரண்டு விபத்து; 5 பேர் பலி

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிஸ்தான் பலுசெஸ்தான் மாகாணத்தின் தலைநகர் ஷாகிடானில் இருந்து அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
ஈரானில் ரெயில் தடம் புரண்டு விபத்து; 5 பேர் பலி
Published on

டெஹ்ரான்,

ரெயில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் ஷாகிடான் நகருக்கு அருகே திடீரென தடம் புரண்டது. ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன. இந்த கோர விபத்தில் பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் 92 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கவிழ்ந்து கிடந்த ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். படுகாயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com