இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் பரவல்; உலக சுகாதார அமைப்பு

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் 82 நாடுகளில் பரவியுள்ளன என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் பரவல்; உலக சுகாதார அமைப்பு
Published on

ஜெனீவா,

இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. இதனால், இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.

இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவானது எளிதில் பரவும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டது. இதனால், இங்கிலாந்தில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீண்டும் கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கொரோனா பாதிப்புகள் 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா பாதிப்புகள் 39 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளன. இதேபோன்று பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகள் 9 நாடுகளில் பரவியுள்ளன என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com