ஜாதவையும், சாதாரண கைதிகளையும் ஒன்றாக கருதுவது தவறு - பாகிஸ்தான்

குல்பூஷன் ஜாதவ்வின் வழக்கையும், இதரக் கைதிகளின் வழக்கையும் ஒன்றாக கருதுவது தவறு என்று பாகிஸ்தான் அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
ஜாதவையும், சாதாரண கைதிகளையும் ஒன்றாக கருதுவது தவறு - பாகிஸ்தான்
Published on

இஸ்லாமாபாத்

இப்படி சாதாரணக் கைதிகளையும், ஜாதவ்வையும் கருதுவது தர்க்கத்தை பரிகாசம் செய்வது போன்றது என்கிறது பாகிஸ்தான்.

இந்த அறிக்கை இரு நாடுகளும் தங்கள் நாட்டின் சிறையிலுள்ள கைதிகளின் பட்டியலை பரிமாறிக் கொண்டதை அடுத்து வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு அளித்துள்ள பட்டியல்படி 540 இந்திய நாட்டினர் அங்கு சிறையிலுள்ளனர். அதில் 500 மீனவர்களும் அடங்குவர். கமாண்டர் ஜாதவ் உளவு, நாச வேலைகளுக்காக இந்தியாவால் இங்கு அனுப்பப்பட்டார். அவரால் உயிரிழப்புகளும், சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் அந்நாடு இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக ஒப்பந்தத்தை முறைப்படி நடைமுறைப்படுத்தி தங்கள் நாட்டிலுள்ள இந்திய கைதிகளின் எண்ணிக்கையை வழங்கி வருகிறது. ஆனால் இந்தியா இவ்வாறு செய்வதில்லை. தண்டனைக்காலம் முடிந்த கைதிகளை நாங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். ஆனால் இந்தியா அவ்வாறு செய்வதில்லை என்றும் பாகிஸ்தான் புகார் கூறியுள்ளது.

இருபது சாதாரணக் கைதிகள் தண்டனைக்காலம் முடிந்தும் இப்போதும் சிறைகளில் உள்ளனர். மேலும் 107 மீனவர்கள், 85 சாதாரண மக்கள் ஆகியோரின் விடுதலையும் நிலுவையிலுள்ளது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. அதே போல மருத்துவ விசா வழங்குவதில் இந்திய அரசு கடும் நிபந்தனைகளை விதிப்பதால் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானிலேயே சிறப்பு சிகிக்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com