சீனா எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு மற்றுமொரு ஆயுத தொகுப்பு விற்பனை- டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

டிரம்ப் நிர்வாகம் தைவானுக்கு மற்றுமொரு ஆயுத தொகுப்பு விற்பனையை அறிவித்து உள்ளது. சீனா எதிர் நடவடிக்கைள் எடுக்கப்படும் என அச்சுறுத்தி உள்ளது.
சீனா எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு மற்றுமொரு ஆயுத தொகுப்பு விற்பனை- டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு
Published on

பீஜிங்

கடந்த சில மாதங்களாக தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகம் தைவானுக்கு மற்றுமொரு ஆயுத தொகுப்பு விற்பனையை அறிவித்து உள்ளது.

இது இந்த ஆண்டு ஆறாவது ஆயுத தொகுப்பு விற்பனை ஆகும் . அமெரிக்க அரசாங்கத்தால் தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை இந்த ஆண்டு 5 பில்லியன் டாலர்களை தாண்டி உள்ளது.

தைவானுக்கு அமெரிக்க அரசாங்கம் தற்போது மேற்கொண்ட புதிய ஆயுத விற்பனை 280 மில்லியன் டாலர் மதிப்புடையது,

இதை தொடர்ந்து தைவானைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்க நடவடிக்கைக்கு எதிராக தேவையான மற்றும் நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீனா எச்சரித்து உள்ளது.

தைவானுடனான இராணுவத் தொடர்பை நிறுத்தவும், சீனா-அமெரிக்க உறவுகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக தைவானுக்கு ஆயுத விற்பனை திட்டங்களில் இருந்து விலகவும் சீனா அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளது.

ஆயுத விற்பனையை நிறுத்துமாறு சீன வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவை வலியுறுத்தியதால், திங்களன்று, அமெரிக்க அரசு இந்த புதிய கள தகவல் தொடர்பு அமைப்பு விற்பனையை அறிவித்தது.

இது தைவானின் இராணுவ தகவல்தொடர்பு திறனை வளர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும். டிரம்ப் நிர்வாகம் அதன் நான்கு ஆண்டு காலப்பகுதியில் தைவானுக்கு இது பதினொன்றாவது ஆயுத விற்பனையாகும்.

தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டாட்சியை பலப்படுத்த இது உதவும் என்று தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்க அரசாங்கத்தை பாராட்டி உள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறும் போது அமெரிக்கா உண்மையில் அவர்களுக்கு உதவுகிறதா அல்லது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறதா என்பதை அவர்கள் வேறுபடுத்தி அறிய முடியும் என்று நான் நம்புகிறேன் என்று கூறி உள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் தைவானுக்கு புதிய ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளித்த நிலையில், நாட்டின் அதிபர் சாய் இங்-வென், தென் சீனக் கடல் பிராந்தியத்தில் தைவான் தினசரி சீனாவிடமிருந்து இராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.சர்வாதிகார சக்திகள் தொடர்ந்து இருக்கும் விதிமுறைகளை மிற முயற்சிக்கின்றன என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com